Water level at Mullaperiyar dam needs to be reduced தேனி மாவட்டம், உத்தமபாளையம் முல்லைப்பெரியார் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும் என கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முல்லைப்பெரியாறு நீரினை பயன்படுத்துவோர் சங்க விவசாயிகள் கோரிக்கை. தேனி மாவட்டம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர் ஆதரமாக விளங்குவது முல்லைப்பெரியார் அணை. கடந்த இரண்டு ஆண்டுகளாக முல்லைப்பெரியார் அணையில் போதிய மழையின்மையின் காரணமாக நீரின் அளவு குறைவாக காணப்பட்டதன் விளைவாக தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு போகம் நெல் விவசாயம் கூட செய்வதில் மிகவும் சிரமாக ஏற்ப்பட்டது. தற்போது இந்த ஆண்டு தென் கிழக்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்ததின் காரணமாக முல்லைப்பெரியார் அணையின் நீர்மட்டம் உயர்ந்தின் காரணமாக கடந்த மாதம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து 120 நாட்களுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் தேவைப்படும் நிலையில் தற்போது முல்லைப்பெரியார் அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி முல்லைப்பெரியார் அணையின் நீர்மட்டம் 122 அடியாக உள்ளது. இந்நிலையில் இன்று உத்தமபாளையம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது முல்லைப்பொரியார் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் விரைவாக குறைந்து விடும் இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும். மேலும் 121 அடியை அணையின் நீர்மட்டம் வந்துவிட்டால் அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படவேண்டும். வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நெல் விவசாயத்திற்கு தண்ணீர் அவசியமாக வேண்டும் இல்லை என்றால் விவசாயம் பெரும் அளவில் பாதிக்கப்படும் அதனால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கபடும் தண்ணீரின் அளவை குறைக்கவேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. பேட்டி : பென்னுபிள்ளை விவசாயி உத்தமபாளையம். This Video Covered From Theni District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : http://www.southindiancrimepoint.com/ or http://sicp.co.in or http://sicp.in or https://twitter.com/crimepoint or https://www.facebook.com/crimepoint or http://south-indian-crime-point-tamil...
Water level at Mullaperiyar dam needs to be reduced - YouTube | |
1 Likes | 1 Dislikes |
36 views views | 88,606 followers |
News & Politics | Upload TimePublished on 8 Dec 2017 |
No comments:
Post a Comment